தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், வாகைகுளம் பகுதியில் நடைபெற்ற பெருந்தமிழர்கள் பெருவிழாவில், சிறப்பு அழைப்பாளராக தி.மு.க எம்.பி. கனிமொழி பங்கேற்றார். அவரை வரவேற்பதில், சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆதரவாளர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் ராணிஸ்ரீ குமார் கணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து வைத்த நிலையில், இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.