கழுத்தை நெருக்கிய 3 எழுத்து...விபரீத முடிவு எடுத்த மாற்றுத்திறனாளி - கதறும் குடும்பம்
கழுத்தை நெருக்கிய 3 எழுத்து...விபரீத முடிவு எடுத்த மாற்றுத்திறனாளி - கதறும் குடும்பம்
வாங்கிய கடனை கேட்டு, தனியார் நிதி நிறுவனங்கள் கொடுத்த நெருக்கடியால் நெசவு தொழிலாளி வீடியோ வெளியிட்டு த*கொலை செய்து கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்கதிர்பூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் மணி. மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். நெசவு தொழில் செய்து வந்த மணி, தனது மருத்துவ செலவுகளுக்காகவும், குடும்பத் தேவைகளுக்காகவும் தனியார் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றதாக தெரிகிறது. அதிக கடன் சுமை காரணமாக பணத்தை திருப்பி செலுத்துவதில் தடுமாறிய இவரை, நிதி நிறுவனங்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மணி, கைத்தறி மேடையிலே த*கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. த*கொலைக்கு முன் மணி பேசி வெளியிட்ட வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில், இதன் பின்னணி குறீத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.