அரசு அமைத்து கொடுத்த GYM...பேரூராட்சி தலைவரின் கணவர் செய்த செயல்..மக்கள் வைத்த முக்கிய கோரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டு பகுதியில் இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உடற்பயிற்சி கூடம் அமைத்து தந்துள்ளது.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் சாந்தியின் கணவரான சதீஷ்குமார் என்பவர் உடற்பயிற்சி கூடத்தில் கட்டட பணிக்கான சென்ட்ரிங் பொருட்களை அடுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால்
அப்பகுதி இளைஞர்கள் உடற்பயிற்சி கூடத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பேரூராட்சி
நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.