68 உயிர்களை குடித்த விஷ சாராயம்.. ஒன் மேன் கமிஷனின் அடுத்த அதிரடி முடிவு

Update: 2024-08-12 12:52 GMT

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பான ஒரு நபர் ஆணையம், இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் தனித்தனியே விசாரணையை துவங்கியது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் விஷச் சாராயம் அருந்தி 68 பேர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த கோகுல் தாஸ் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. விஷசாராயம் அருந்தி 161 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், முதற்கட்டமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களிடம் ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தியது. விசாரணைக்கு ஆஜராகாத 11 பேருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப

கள்ளக்குறிச்சி போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் விஷ சாராயம் குடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 68 பேரின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொள்ள ஒரு நபர் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி முதல் கட்டமாக, உயிரிழந்த 40 பேர்களின் குடும்பத்தினர்களுக்கு, கள்ளக்குறிச்சி காவல்துறையினர் மூலமாக விசாரணைக்கு ஆஜராக அனுப்பப்பட்டது. இதில் முதல் கட்டமாக ஒரு நபர் ஆணையத்தின் தலைவர் கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்