களைகட்டிய மாங்கனி திருவிழா - குவிந்த பக்தர்கள் கூட்டம்

Update: 2024-06-21 12:02 GMT

63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின்

வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் விதமாக, காரைக்காலில் மாங்கனி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இன்று பிச்சாண்டவர் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. காரைக்கால் அம்மையார் பிச்சாண்டவ மூர்த்தி சுவாமிக்கு மாங்கனியை வழங்கியதை நினைவு கூறும் வகையில், வீதியுலா வரும் இறைவனுக்கு பக்தர்கள்,

மாங்கனிகளை அளித்தனர். மாடிகள் மற்றும் கட்டிடங்களின்

மேலிருந்து, மாங்கனிகளை வீசி எறிந்து வேண்டுதல்களை

நிறைவேற்றினர். வீசி எறியப்பட்ட மாங்கனிகள், வானில் இருந்து மாங்கனி மழை பொழிவது போல் காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்