புதினை இழுத்து சூனியம் வைத்த பைடன் மொத்த நம்பிக்கையும் இழந்த ஒபாமா.. ஹாட் டாப்பிக்கான இறுதி முடிவு

Update: 2024-07-22 07:42 GMT

புதினை இழுத்து சூனியம் வைத்த பைடன்

மொத்த நம்பிக்கையும் இழந்த ஒபாமா

உலகின் ஹாட் டாப்பிக்கான இறுதி முடிவு

சொந்த கட்சியினரே எதிர்க்க.. வயதும் துரத்த... உடல்நலமும் நெருக்க.. இறுதியாக அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து பைடன் விலகிவிட்டார்... இதுகுறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு

வயது 81... அமெரிக்க அதிபர்... ஆட்சிக்கு எதிராக எந்த பெரிய எதிர்ப்பும் இல்லை... என்ற சூழலில் ஜோ பைடனை முன்னிறுத்தி நவம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலுக்கு தயாரானது ஜனநாயக கட்சி...

பிரச்சாரத்தையும் தொடங்கினார் பைடன்... அப்போது வாய் தவறி பேசியது எல்லாம் வினையாக தொடங்கியது.

அப்படி துணை அதிபராக பணியாற்றிய முதல் கறுப்பின பெண்மணி நான் என்று பைடன் பேசியது... சுதந்திர தின வாழ்த்தை கிறிஸ்துமஸ் வாழ்த்து போல் சொன்னது.. 2020லும் டிரம்பை வெல்வென் என்று பைடன் சபதமிட்டது சலசலப்பை ஏற்படுத்தியது...

இதெல்லாம் போக டிரம்ப் உடனான விவாதத்தில் பைடன் சொதப்பியது ஹைலைட்....

அமெரிக்க தேர்தலில்... இரு கட்சி வேட்பாளர்கள் நேரடியாக வாதம் செய்வது மரபு... அப்படி குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்புடன் விவாதத்திற்கு போய்... தடுமாறியதால் சொந்த கட்சியினரே போட்டியில் இருந்து போய் விடுங்கள் என பைடனுக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கி விட்டார்கள்.

ஆனால் ஜனநாயக கட்சி தலைமை மட்டத்தில் பைடன் மீதான பாசிட்டிவ் திங் குறையவில்லை... வயது குறித்த பேச்சுக்கு வயசா எனக்கு.. வெற்றிதான் எனக்கு என பிரசாரத்தில் தீவிரம் காட்டினார் பைடன்..

போட்டியில் இருந்து விலகுவீர்களா என்ற கேள்விக்கு கடவுள் மட்டுமே.... என்ன தேர்தல் போட்டில இருந்து தடுக்க முடியும்...என்றார்

இந்த சூழலில் அமெரிக்காவில் நேட்டோ தலைவர்கள் மாநாடு நடந்தது. அங்கு பைடன் ஸ்கோர் செய்வார் என ஜனநாயக கட்சி பிளான் போட்டது... பிளான்படி அடித்து ஆடிய பைடன்..

உக்ரைன் அதிபரை புதின் என்றும் டிரம்பை தன்னோடு பணியாற்றும் துணை அதிபர் என்றதும் மொத்த பிளானையும் குளோஸ் செய்தது.

பைடன் உளறல்கள் ஒருபுறம் இருக்க... துப்பாக்கி சூடு... துவண்டு இருந்த டிரம்ப்-ன் மார்க்கெட்டை உயர்த்தி விட்டது.

சில மாநிலங்களில் பைடன் பின்னடவை சந்திக்க... அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்த சூழலில்.. பைடன் விலகியே தீர வேண்டும் என கட்சி காரர்கள் சொன்னதோடு, கட்சிக்கு நிதி அளித்தவர்களும் சொல்ல தொடங்கி விட்டார்கள்.

இதில் பைடனுக்கு ஆரம்பம் முதல் துணை நின்ற, அதிகாரமிக்க நபரான ஒபாமா மனம் மாறியது. முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசியும் நம்பிக்கை இழந்தது, பைடனுக்கு பெரும் பின்னடைவானது.

இருவருமே... கட்சி வெற்றி கேள்விக்குறியாகிறது, பைடன் விலகுவதே சரியாக இருக்கும் என சொல்லியதாக தகவல்கள் வெளியாகின.

பைடனும் போட்டியிலிருந்து விலகினால்... கமலா ஹாரிசை அதிபர் வேட்பாளராக்க ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்கள் பரிசீலிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஜனநாயக கட்சி அடுத்த மாதம் நடக்க இருக்கும் பொதுக்குழுவில் அதிபர் வேட்பாளரை இறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

நேரம் நெருங்க நெருங்க பைடன் விலகுவாரா என்ற கேள்விக்கு பாசிட்டிவான பதிலை பைடனே கொடுத்துவிட்டார்...

ஆம் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது தனது நோக்கமாக இருந்தாலும் தேர்தலில் இருந்து விலகுவதாகவும்.... எஞ்சியிருக்கும் பதவிக்காலத்தை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த இருப்பதாகவும் என அறிவித்தது உள்ளார் பைடன்

Tags:    

மேலும் செய்திகள்