ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக நவாஸ் கனி மீண்டும் களமிறங்குகிறார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது எம்.பியாக உள்ள நவாஸ் கனியை மீண்டும் வேட்பாளராக நிறுத்த திருச்சியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மனிதநேய மக்கள் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டால் அதை இரட்டிப்பாக வரவேற்போம் என ஐ.யூ.எம்.எல் தேசிய தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்தார்.