பெங்களூருவில் உள்ள வழக்கு ஒன்றில் கிடைத்த தகவலின் படி, சென்னை வருமான வரித்துறை அதிகாரிகளுடன் இணைந்து, பெங்களூரு வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். வேப்பேரி, கேகேநகர், நுங்கம்பாக்கம், தி.நகர் என பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள ஜவுளி நிறுவன அதிபர்கள் மற்றும் தொழிலதிபதிர் வீடு, அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. கே.கே.நகரில் உள்ள வஸ்தரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவன உரிமையாளர் நீலகண்டனின் வீடு மற்றும் கோபாலபுரத்தில் உள்ள அவருடைய அலுவலகம் என தொடர்ந்த இந்த சோதனை, வேப்பேரியில் உள்ள தொழிலதிபர் பாரஸ்மஸ் வீடு மற்றும் அலுவலகம் என தொடர்ந்த நிலையில், சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.