கடந்த சில ஆண்டுகளாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தற்போது இஸ்ரேலில் நடந்து வரும் தாக்குதல் காரணமாக கொடைக்கானலில் உள்ள வட்டக்கானல் பகுதிக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இந்தப் பகுதிக்கு வருபவர்கள் காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ஒரு சார்பு ஆய்வாளர் தலைமையில் சுழற்சி முறையில் 3 காவலர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.