`இஸ்ரேல்-ஈரானுக்கு'... லாவோஸில் இருந்து அழுத்தமாக மெசேஜ் கொடுத்த பிரதமர் மோடி | Israel - Iran

Update: 2024-10-11 11:20 GMT

மத்திய கிழக்கில் விரைவில் அமைதியை மீட்டெடுக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்...

லாவோஸ் நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி கிழக்காசிய உச்சி மாநாட்டில் உரையாற்றினார். அப்போது, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் இந்தியாவின் இந்தோ-பசிபிக் பார்வை மற்றும் குவாட் ஒத்துழைப்புக்கு முக்கியமானது என குறிப்பிட்டார். தென் சீனக் கடலில் அமைதி பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை முழு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் நலனுக்கானது என தெரிவித்த பிரதமர், நமது அணுகுமுறை வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர விரிவாக்கத்தில் அல்ல என குறிப்பிட்டார்.

உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மோதல்கள் காரணமாக மிகவும் எதிர்மறையாக பாதிக்கப்பட்ட நாடுகள் தெற்கு உலகில் உள்ள நாடுகள் என தெரிவித்த பிரதமர் மோடி, யூரேசியா மற்றும் மத்திய கிழக்கு போன்ற பகுதிகளில் கூடிய விரைவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்... தான் புத்தரின் தேசத்தில் இருந்து வருவதாகவும், இது போரின் காலம் அல்ல என்று தான்ன் பலமுறை கூறியுள்ளதாகவும் குறிப்பிட்ட பிரதமர், போராட்ட களத்தில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்