IPL தொடரிலிருந்து வெளியேறியது 2ம் அணி.. RCB-க்கு இன்னும் உயிர் இருக்காம்
- தரம்சாலாவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் சாம் கரண் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
- பெங்களூரு அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய நட்சத்திர வீரர் விராட் கோலி அதிரடியாக விளையாடி ரன் வேட்டையில் ஈடுபட்டார்.
- ரஜத் பட்டிடாருடன் இணைந்து அதிரடியாக விளையாடிய கோலி, 47 பந்துகளில் 6 சிக்சர்களுடன் 92 ரன்களை குவித்தார்.
- ரஜத் பட்டிடார் வெறும் 23 பந்துகளில் 55 ரன்களை குவித்து அசத்தினார்.
- இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய கேமரான் க்ரீன் 27 பந்துகளில் 46 ரன்களும், தினேஷ் கார்த்திக் 7 பந்துகளில் 18 ரன்களும் குவித்தனர்.
- இதன்மூலம் 20 ஓவர்களில் ஆர்.சி.பி 241 ரன்களை சேர்த்தது.
- 242 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணிக்கு பேர்ஸ்டோ, ரூசோ நம்பிக்கை அளித்தனர்.
- எனினும், மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து பேட்டர்கள் ஆட்டமிழந்ததால், பஞ்சாப் அணி 181 ரன்களுக்கு ஆட்டமிழந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
- மேலும், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்தும் பஞ்சாப் அணி வெளியேறியது.
- பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் அசத்திய விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.