மொரிஷியஸ்ஸில் முதலீடு... அதானிக்கு அடுத்த சிக்கல்; ரகுராம் ராஜன் பரபரப்பு கேள்வி

Update: 2023-03-06 12:39 GMT

அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள மொரிஷியஸ் நாட்டை தளமாக கொண்ட 4 நிறுவனங்கள் மீது செபி விசாரணை தேவை என்று ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

பங்கு சந்தைகளில் அதானி குழுமம் செய்துள்ள முறைகேடுகள் பற்றி ஜனவரி 24இல் வெளியான ஹிண்டனர்பர்க் அறிக்கையினால், முதலீட்டாளர்களுக்கு இதுவரை 13 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மொரிஷியஸ் நாட்டைச் சேர்ந்த 4 முதலீட்டு நிறுவனங்கள், 50 ஆயிரத்து 700 கோடி ரூபாய் அளவுக்கு அதானி நிறுவன பங்குகளில் முதலீடு செய்துள்ளதாக இந்த அறிக்கை கூறியிருந்தது. இந்த 4 நிறுவனங்களின் பின்புலம் பற்றி இந்திய பங்கு சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி, இதுவரை ஏன் விசாரணை எதையும் மேற்கொள்ளவில்லை என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த 4 நிறுவனங்களும், அதானி குடும்பத்தின் பினாமி நிறுவனங்கள் என்ற குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணை நடத்த, மத்திய புலனாய்வு நிறுவனங்களின் உதவி தேவைப்படுகிறதா என்று கேட்டுள்ளார். ரகுராம் ராஜன் தற்போது சிகாகோ பல்கலைகழகத்தில் பொருளாதாரத் துறை பேராசியராக பணியாற்றி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்