மதுபோதையில் எதிர் வீட்டு பெண்ணை.. அவதூறாக பேசி தாக்கியதால் பரபரப்பு..வெளியான சிசிடிவி காட்சிகள்

Update: 2024-01-14 05:26 GMT

கன்னியாகுமரி மாவட்டம் கிராத்தூர் பகுதியை சேர்ந்த ரீனா என்பவர், குழந்தைகளுடன் தனியே வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடன் வசூலிப்பதற்காக 4 வங்கி ஊழியர்கள், ரீனாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்வீட்டில் குடியிருக்கும் சசி என்பவர் மதுபோதையில், ரீனாவை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ரீனாவை சசி சரமாரியாக தாக்கியுள்ளார். இதையடுத்து ரீனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு, சசியை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்