அரசு மணல் குவாரியில் ஆய்வு..ED-யின் அதிரடி..! | Tamilnadu | ED Raid

Update: 2023-10-12 17:22 GMT

தஞ்சை கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் குவாரியில், அமலாக்கத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். தஞ்சை மாவட்டம் கோவிலடி கொள்ளிடம் ஆற்றில், திருச்சினம்பூண்டி அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு எடுக்கப்பட்ட மணலின் அளவு மற்றும் தற்போதுள்ள நிலை குறித்து, அமலாக்கத்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதற்காக சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவிலடி மணல் சேமிப்பு கிடங்கிலும் அமலாக்கத்துறையினர் பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்