திடீரென காதை கிழித்த `பேரொலி’ - அதிர்ந்த சென்னை மெரினா பூமி.. வானை பார்த்து மிரண்ட மக்கள்

Update: 2024-10-02 08:48 GMT

சென்னை, மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி ஒத்திகை பார்வையாளர்களை பரவசமடைய செய்தது. ராணுவ வீரர்களின் அசாத்திய திறமைகளை கண்டு மக்கள் வியந்து போயிருக்கின்றனர்... பார்க்கலாம் விரிவாக..

இந்திய விமானப்படையின் 72 வது ஆண்டு விழா அக்டோபர் 6 ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் கொண்டாடப்பட இருக்கிறது..

இதில், விமானப்படையின் 72 விமானங்களில் வீரர்கள் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட உள்ளனர்...இந்நிலையில், இதற்கான முதற்கட்ட ஒத்திகை நிகழ்ச்சியை மெரினா கடற்கரையில் வீரர்கள் மேற்கொன்டனர்..

இதில், இந்தியாவின் அதிநவீன விமானங்கள் முதல் பாரம்பரிய விமானங்கள் வரை... பல்வேறு விமானங்கள் வானில் வட்டமிட்டு ஒத்திகை மேற்கொண்டது பார்வையாளர்களை கவர்ந்தது...

ஜெயிலர், பீஸ்ட் படத்தின் பிஜிஎம்முடன், விமானத்தை வானில் செங்குத்தாக நிற்க செய்து தீ பிளம்பை கொட்டியும், பொது மக்களின் காதை கிழித்தப்படியும் வீரர்கள் ஒத்திகை மேற்கொண்டது, மக்களை வியப்புக்குள்ளாக்கியது..

துப்பாக்கி ஏந்திய படி எம்ஐ 70 ஹெலிகப்டர்களில் 24 வீரர்கள் புழுதி பறக்க சாகசத்தில் ஈடுபட்டது பார்வையாளர்கள் பரவசத்தில் உறைய வைத்தது..ஜாகுவார் v3 ஃபார்மேஷன், கார்த்திகேயன் ஃபார்மேஷன், மெரினா, சோழா, பாண்டியா உள்ளிட்ட விமானங்களில் வானில் சுழன்றடித்து அசத்தினர் வீரர்கள்..இந்திய ராணுவத்தின் அசாத்திய திறமைகளை கண்டு, மக்கள் அசந்து போன நிலையில், அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்திய விமானப்படையில் சாகச நிகழ்ச்சிக்கும் மக்களுடன் சேர்ந்து மெரினாவும் தயாராகி வருகிறது...

Tags:    

மேலும் செய்திகள்