விக்கெட் இழப்பின்றி இந்தியா அபார வெற்றி..! | India | South Africa

Update: 2024-07-10 08:59 GMT

விக்கெட் இழப்பின்றி இந்தியா அபார வெற்றி..!

தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் வெற்றி பெற்று, தொடரை இந்திய மகளிர் அணி சமன் செய்தது. தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணி, 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 84 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனையடுத்து, 85 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய மகளிர் அணி, 10.5 ஓவர்களிலேயே, விக்கெட் ஏதும் இழக்காமல், 88 ரன்களை எடுத்தது. இதன்மூலம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றியை பெற்றது. இதில், ஸ்மிருதி மந்தனா, 40 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் டி20 தொடர் சமன் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்