நதிகள் இணைப்பு வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட அனுமதி கோரி, அய்யாக்கண்ணு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், மனுதாரர் நிபந்தனையை மீறி செயல்படுவதால் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ஆரம்ப கட்ட உழவு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த போராட்டம் தேவையா என கேள்வி எழுப்பினார். அனுமதி வழங்கிய போது விதிக்கும் நிபந்தனைகளை மீறுவது ஏன் எனவும்
பொது இடங்களில் வித விதமான போராட்டங்களை நடத்துவது குறித்தும் மனுதாரர் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
போராட அனுமதி வழங்கிய போதும், விதிக்கும் நிபந்தனைகளை மீறுவது ஏன் என தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.