"நீங்க வேணா பந்தையத்துக்கு வரீங்களா?" - 32 புரோட்டா சாப்பிட்டால் பணம் தேவையில்லை!

Update: 2024-07-28 16:30 GMT

வெண்ணிலா கபடி குழு பட பாணியில் திருச்சியில் புரோட்டா கடை ஒன்றில் வைக்கப்பட்டுள்ள போட்டி போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... வெண்ணிலா கபடி குழுவில் சூரியின் பரோட்டா காமெடியைப் பார்த்து வயிறு வலிக்க சிரித்திருப்போம்....

சூரியின் புரோட்டா போட்டிக்கு போட்டியாக உண்மையாகவே ஒரு புரோட்டா கடை போட்டி அறிவித்துள்ளது... திருச்செந்தூர் அருகே மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்தவர்கள் சுந்தர், இசக்கிமுத்து... சென்னையில் ஐடி கம்பெனியில் பணியாற்றி வந்த இவர்கள் கொரோனா காலத்தில் சொந்த ஊர் வந்து இரவு நேர துரித உணவு கடை நடத்தி வந்துள்ளனர். இப்போது அடுத்த கட்டமாக கடை மேம்படுத்தப்பட்ட நிலையில் கடை விளம்பரத்திற்காக போட்டி ஒன்றை அறிவித்துள்ளனர். இதற்காக, நீங்க வேணா பந்தையத்துக்கு வாறீங்களா? என்ற வாக்கியத்துடன் பிளக்ஸ் வைக்கப்பட்டுள்ளது... ஒருவர் 32 புரோட்டாக்கள் சாப்பிட்டால் பணம் செலுத்தத் தேவையில்லையாம்...

மாறாக கடையின் உரிமையாளர் அந்த புரோட்டாவிற்கான பணத்தை சாப்பிட்டவருக்கே தந்து விடுவார்... சாப்பிட முடியாதவர்கள் சாப்பிட்டதற்கான பணத்தைத் தந்து விட்டுக் கிளம்ப வேண்டியது தான்..போட்டிக்கு நாங்க வரலாமா என போட்டி போட்டுக் கிளம்பி விட்டனர் இளைஞர்கள்..

Tags:    

மேலும் செய்திகள்