காதலனுடன் வீட்டிற்க்குள் சென்ற நொடி பறிபோன உயிர் - காத்திருந்த அதிர்ச்சி.. அலறிய தாய்

Update: 2024-08-24 14:42 GMT

கௌதாளம் கிராமத்தை சேர்ந்த 22 வயதாகும் நரசிம்மமூர்த்தி, பச்சப்பனட்டி கிராமத்தை சேர்ந்த கல்லூரி முதலாமாண்டு படிக்கும் 17 வயதாகும் யுவஸ்ரீ காதலித்துள்ளார். நரசிம்மமூர்த்தி தனது மகளுக்கு தொந்தரவு கொடுப்பதாக யுவஸ்ரீ தாயார் கொடுத்த புகாரில் தேன்கனிக்கோட்டை மகளிர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 10 நாட்களுக்கு முன்பாக பெயிலில் வெளியே வந்த நரசிம்மமூர்த்தியை பார்ப்பதற்காக யுவஸ்ரீ அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டுக்கு வந்தப்போது நீண்ட நேரம் கழித்து கதவு திறக்கப்படாததால், ஜன்னலை திறந்து பார்த்துள்ளார்,. அப்போது காதல் ஜோடி தூ*கிட்டு த*கொலை செய்துக்கொண்டதை பார்த்து அதிர்ச்சியில் கதறி துடித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதோடு த*கொலை குறித்து விசாரித்து வருகிறார்கள். காதல் ஜோடி த*கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்