அரசுக்கு கெடு விதித்து... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Chennai HC

Update: 2024-04-07 11:03 GMT

கெளரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக பணி நிரந்தரம் செய்வது தொடர்பான தேர்வு நடைமுறைகளை, 12 வாரங்களில் முடிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு, அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளர்களாக பணியாற்றியவர்களை, உதவி பேராசிரியர்களாக நியமனம் செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டு, நேர்முகத்தேர்வு வரை நடைபெற்றது. ஆட்சி மாற்றம் காரணமாக, இந்த நடைமுறைகள் நிறுத்தப்பட்டு, நான்காயிரம் உதவி பேராசிரியர்கள் தேர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில், விரிவுரையாளர்கள் தரப்பில் புதிய அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், 1,146 கெளரவ விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியர்களாக பணி நிரந்தரம் செய்வது தொடர்பான தேர்வு நடைமுறைகளை, 12 வாரங்களில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்