சின்னாற்றில் கடும் வெள்ளப் பெருக்கு...வெளியேற முடியாமல் தவிக்கும் மக்கள்

Update: 2022-10-20 12:45 GMT

  சின்னாற்றில் கடும் வெள்ளப் பெருக்கு...வெளியேற முடியாமல் தவிக்கும் மக்கள் - வீடு வீடாக பால் பாக்கெட் கொடுத்த மீட்பு படை

ஓசூரில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், வீட்டை வெளியேற முடியாமல் தவித்த குடும்பத்தினரை தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ளனர். ஓசூர் சின்னாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக கேலக்ஸி பார்க், ஓசூர் வேலி, வசுதா லேஅவுட் ஆகிய மூன்று குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது.

குடியிருப்புக்கு வெளியே நிறுத்தி இருந்த இருபதுக்கு மேற்பட்ட கார்கள், 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கின. வெள்ள நீரால் வெளியே வர முடியாமல் வீடுகளில் முடங்கி இருந்த பொதுமக்களை காலை முதல் தீயணைப்பு துறையினர் தொடர்ந்து மீட்டு வருகின்றனர்.

வெள்ள நீர் சூழ்ந்ததால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளதாக கூறும் கிராம மக்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றி கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓசூரில் வெள்ளம் சூழ்ந்து பகுதிகளில் அவதியடைந்து வந்த மக்களை தீயணைப்புத்துறையினர் படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தாழ்வான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

கார்கள் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இது குறித்து அறிந்த ஓசூர் தீயணைப்புத் துறையினர் படகு மூலம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று அத்தியாவசிய தேவைகளான பால் உள்ளிட்ட பொருள்களை வழங்கி வருகின்றனர்.

மேலும் அங்கிருந்த பொது மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.

கனமழை காரணமாக ஓசூர் சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

நிரம்பி வழிந்த வெள்ள நீர் குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ள நீரால் உடமைகள் சேதமடைந்துள்ளதாகவும், அசாதரண நிலையை கருத்தில் கொண்டு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்