#Breaking | நெருங்கும் கோடை... சுட்டெரிக்கும் வெயில்.. - சுகாதாரத்துறை எச்சரிக்கை

Update: 2024-03-09 14:12 GMT

வெப்ப அலை - சுகாதாரத்துறை எச்சரிக்கை

வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை

தேசிய சுகாதாரத்துறை வழங்கிய நெறிமுறைகளை பின்பற்றுமாறு மாவட்ட துணை சுகாதார இயக்குநர்களுக்கு உத்தரவு

"அதீத வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம், இறப்பு போன்றவற்றை தினசரி பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்"

"வெப்பத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்"

"மருத்துவமனைகளில் போதுமான மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்"

"மின் வாரியத்துடன் ஆலோசனை நடத்தி மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்"

குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள் முடிந்தவரை வீடுகளுக்குள்ளே இருக்குமாறு அறிவுறுத்தல்

பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 வரை வெளியில் வர வேண்டாம் எனவும் எச்சரிக்கை

வெயிலில் பணிபுரிவோர் தினசரி 5 லிட்டருக்கும் அதிகமான தண்ணீரை குடிக்க அறிவுறுத்தல்

"அதிகமான வெயிலில் இருந்தால் Heat stroke, உடலில் நீர்சத்து குறைந்தால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் வாய்ப்பு"

Tags:    

மேலும் செய்திகள்