விமரிசையாக நடைபெற்ற அனுமன் ஜெயந்தி தேங்காய் தலையில் அடித்து பற்களால் உரித்து ஆடிய பக்தர்கள்

Update: 2024-01-12 02:07 GMT

திருச்செந்தூர் ஸ்ரீ ராம தூத யோக ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து முக்கிய நிகழ்வான தேங்காய் உரிப்பு நடைபெற்றது. இதில் அருள் வந்து ஆடிய ஆண், பெண் பக்தர்கள் ஆவேசத்துடன் இளநீரை பற்களால் உரித்தும், தலையால் அடித்து உடைத்தும் நீர் பருகினர். இதை கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்

Tags:    

மேலும் செய்திகள்