ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போதே நின்ற இதய துடிப்பு... உயிர் பிரியும் கடைசி நொடி... அதிர்ச்சி வீடியோ
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில், ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இளைஞர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடற்பயிற்சி செய்த போது சோர்வான இளைஞர் அங்குள்ள பெஞ்சில் அமர்ந்துள்ளார். அப்போது திடீரென தரையில் மயங்கி விழுந்து அவர் அங்கேயே உயிரிழந்தார். கடந்த 30ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது..