செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர். வார விடுமுறையை முன்னிட்டு தங்கள் சொந்த ஊருக்குச் சென்ற மக்கள் மீண்டும் சென்னை நோக்கி திரும்பி வருகின்றனர். இதனால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.