கிரானைட் 257 கோடி ரூபாய் முறைகேடு வழக்கில், மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி உள்ளிட்ட 12 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். நீதிபதி சிவகடாட்ஷம் முன் ஆஜரான நிலையில், அடுத்தகட்ட விசாரணையை வரும் நவம்பர் -6 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார். மாவட்ட நீதிமன்றத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர். இதனிடையே அரசியல் வருகை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு துரை தயாநிதி பதிலளிக்காமல் புறப்பட்டு சென்றார்.