தனக்கு வாழ்வு கொடுத்த அரசு பள்ளியை ஜொலிக்க வைத்து அழகு பார்த்த முன்னாள் மாணவர் -இதுதான் நன்றிக்கடன்

Update: 2024-08-11 08:36 GMT

தனக்கு வாழ்வு கொடுத்த அரசு பள்ளியை ஜொலிக்க வைத்து அழகு பார்த்த முன்னாள் மாணவர்... இதுதான் சரியான நன்றிக்கடன்

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே, மழை வெள்ளத்தில் சேதமடைந்த அரசுப்பள்ளி, முன்னாள் மாணவரின் முயற்சியால் மறுசீரமைக்கப்பட்டு, பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையால், ஏரல் அருகே வாழவல்லான் பகுதியில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி முழுவதும் சேதமடைந்தன. கடந்த 1976ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தொடங்கப்பட்ட இப்பள்ளி, 2000-மாவது ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் சுற்று வட்டாரப்பகுதியைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர், தனது நண்பர்களுடன் இணைந்து, பள்ளியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். இதன் காரணமாக பள்ளியில் தற்போது பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. இதனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்