மகளிர் உரிமைத்தொகை... "63 லட்சம் பேர்..." - ஆளுநர் தமிழிசை பரபரப்பு குற்றச்சாட்டு
கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில், 63 லட்சம் பெண்கள் நீக்கப்பட்டுள்ளதாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடியின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை தனியார் பள்ளியில் ஆயுஷ் ஹோமம், கோ பூஜை மற்றும் கோ தானம் நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், இரண்டரை வருடங்கள் முடிந்த காலத்தை கணக்கிட்டு, வங்கிக் கணக்கில் பெண்களுக்கு பணத்தை செலுத்துமாறு கூறினார்.