அரசுப் பேருந்து சரக்கு வாகனம் மோதி விபத்து - 2 சிறுவர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயம்

Update: 2024-01-14 03:36 GMT

ராமாநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே, விபத்தை தொடர்ந்து. போக்குவரத்தை சரிசெய்த ரோந்துப் போலீசாரிடம் இருசக்கர வாகன ஓட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. P.V.பட்டிணம் பகுதியில் அரசுப்பேருந்து, சரக்கு வாகனம் மோதியதில் 2 சிறுவர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, அப்பகுதியில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்