மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி
10 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டதால்,
தங்கம் விலை, கடந்த இரண்டு நாட்களில், சவரனுக்கு
மொத்தம் 2 ஆயிரத்து 560 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து, 51 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்று
60 ரூபாய் குறைந்து, 6 ஆயிரத்து 490 ரூபாயாக உள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின்
மதிப்பு இன்று 83 ரூபாய் 71 பைசாவாக, மாற்றம்
எதுவும் இல்லாமல் தொடர்கிறது.
மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் குறியீடு,
இன்று 280 புள்ளிகள் குறைந்து, 80 ஆயிரத்து
148ஆக சரிந்துள்ளது.