அதிகவட்டி தருவதாகச் சொல்லி மோசடி.... ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தில்லாலங்கடி...
மதுரை
அதிகவட்டி தருவதாகச் சொல்லி மோசடி....ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தில்லாலங்கடி...
எங்க கம்பெனியில் முதலீடு செய்தால் ஜாக்பார்ட்...
பெரும் தலைகளுக்கு லுக்கவுட்...சிறு தலைகளுக்கு லாக்கப்...
ஒரு லட்சத்துக்கு 10 ஆயிரம் வட்டி, கைமேல காசு, கட்டுக்கட்டா பணம்னு அசத்தலான ஆஃபர் விட்டு மக்களோட பணத்த ஆட்டைய போடுற உப்புமா நிதி நிறுவனங்கள நாம அடிக்கடி பாக்குறோம்...அந்த வரிசையில புது வரவா இன்னொரு நிறுவனமும் இனைஞ்சிருக்கு.
ஒரு லட்சத்துக்கு 10 ஆயிரம் வட்டி...
இந்த வருடம் பணம் போட்டால் அடுத்த வருடம் டபுள் ரிட்டன்...
தூபாய் எண்ணை கிணறில் முதலீடு...
இந்த வார்த்தைகள் தான் தற்போது பல மோசடி நிருவணங்களின் தாரக மந்திரமாக உள்ளது.
என்ன சொன்னாலும் நம்புறாங்களே என மோசடிகாரர்களே ஆச்சரியப்படும் அளவுக்கு, தமிழக மக்களின் மன நிலை மாறி இருக்கிறது என்றே சொல்லாம்...
அதிக வட்டி தருகிறோம் என்று ஆசை காட்டி அல்வா கொடுத்த டுபாக்கூர் கம்பெணிகளில் சமீபத்திய ட்ரெண்டில் இருந்து வந்தது ஆருத்ரா கோல்ட் மோசடி.
நம்பி முதலீடு செய்தவர்களிடம் கோடிகளை கொள்ளையடித்து விட்டு சிட்டாக பறந்துவிட்ட ஆருத்ராவின் நிர்வாகிகளையே இன்னும் பிடிக்க முடியவில்லை
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் இந்த மோசடி பட்டியலில் இணைந்திருக்கிறது.
மதுரையை தலைமையிடமாகக் கொண்டு neomax என்ற நிதி நிறுவணம் இயங்கி வந்தது. ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வந்த இந்த நிறுவனம், பொதுமக்களிடமிருந்து கோடிக் கணக்கான முதலீடுகளை வாங்கிக் குவித்திருக்கிறது.
ஊர் ஊராகச் சென்று motivational என்ற பெயரில் மக்களை மூலைசலைவை செய்திருக்கிறார்கள் இந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள்.
தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதா மாதம் அதிக வட்டி கிடைக்குமென கூறி மக்களை நம்ப வைத்திருக்கிறார்கள்.
ஷேர் மார்க்கட் ஷேஃப்(Safe) இல்லை, பேங்கில் வட்டி குறைவு... இப்படி ஆயிரம் கண்ஃபியூஷனில் இருக்கும் மக்களே இவர்களது முதல் குறி.
அடிப்படையில் நிலம் வாங்கி விற்கும், ரியல் எஸ்டேட் நிறுவனமாக இருப்பதால், மக்களின் முதலீடை நிலம் வாங்குவதில் இன்வெஸ்ட் செய்வதால், பல வருடங்கள் கழித்து நிலத்தை விற்றால் அதிக லாபம் கிடைக்கும். இது தான் எங்கள் பிஸ்னஸ் கான்செப்ட் என்று இஷ்டத்துக்கு அள்ளி விட்டிருக்கிறர்கள்.
"மண்ணில் போட்டால் பொண்ணாக கிடைக்குமென மனக் கோட்டை கட்டிய மக்கள் போட்டி போட்டுக் கொண்டு இந்த மோசடி நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள்.
இதனையடுத்து தமிழ் நாட்டின் பல இடத்திலும் தனது கிளைகளை தொடங்கிய neomax ஃபோர்ஜரியில் ப்ரோ மேக்ஸ்சாக விஸ்பரூபம் எடுத்திருக்கிறது.
அந்தந்த ஏரியாவுக்கு ஒரு இயக்குநர், முகவர்கள் என ஏராளமானவர்களை வைத்துக் கொண்டு தனது பிசினசின் எல்லையை விரிவடைய செய்திருக்கிறது.
டார்கெட் பணம் முழுமையாக வரும் வரை, முதலீட்டார்களுக்கு வட்டியை சரியாக கொடுத்து வாடிக்கையாளர்களின் குட் புக்கில் இடம் பிடித்திருக்கிறது இந்த நியோ மேக்ஸ்
இன்கம் அதிகமாக அதிகமாக, அவுட் கோயிங்கை சத்தமில்லாமல் குறைத்து வந்திருக்கிறது.
ஒரு கட்டத்தில் மொத்த வாடிகையாளர்களுக்கும் கம்பி நீட்டி இருக்கிறது neomax.
வட்டியும் வரவில்லை, போட்ட முதலுக்கும் பதில் இல்லை என்ற நிலையில் முதலீட்டாளர்கள் பொருளாதார குற்ற பிரிவின் கதவை தட்டி இருக்கிறார்கள். விவகாரம் பெரிதானதை தொடர்ந்து nromax நிறுவனத்தில் பணம் போட்டு ஏமாந்தவர்களுக்காக சிறப்பு முகாம் நடத்தி புகார்களை பெற்றிருக்கிறார்கள்.
இதுவரை வந்த புகார்களின் எண்ணிக்கை 100 என்றும், 22 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது. அடுத்தடுத்தடுத்த நாட்களில் இந்த எண்ணிகை இன்னும் அதிகமாகலாம் என்று சொல்லப்படுகிறது.
இதனையடுத்து நியோ மேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 30 க்கும் மேற்பட்ட இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை செய்திருக்கிறார்கள். அதோடு இந்த நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் சிலரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளையும் தேடி வருகின்றனர்.