வெடித்த மோதல் - 6 பேர் கொலை... பிரான்ஸ் உடனே பறந்த பிரதமர்

Update: 2024-05-23 09:07 GMT

வெடித்த மோதல் - 6 பேர் கொலை... பிரான்ஸ் உடனே பறந்த பிரதமர்

பிரஞ்சுக் கட்டுப்பாட்டில் உள்ள நியூ கலிடோனியா தீவில் தேர்தல் விதிமுறை மாற்றப்பட்டு புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெடித்த மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் பிரான்ஸ் வெடித்த மோதல் - 6 பேர் கொலை... பிரான்ஸ் உடனே பறந்த பிரதமர் மேக்ரான் நியூ கலிடோனியாவுக்குச் சென்றுள்ளார்...

இங்கு பூர்வ குடிகளான கனக் மக்களுக்கும் பிரஞ்சு மக்களுக்கும் பிரச்சினை நீண்ட காலமாக நிலவி வரும் நிலையில், 10 ஆண்டுகள் நியூ கலிடோனியாவில் வசித்திருந்தால் பிரஞ்சு மக்களும் தேர்தலில் வாக்களிக்கலாம் என புதிய சட்டம் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிகப்பெரிய போராட்டம் வெடித்தது... இதைத் தொடர்ந்து வெடித்த கலவரத்தில் இதுவரை 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 280 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து நியூ கலிடோனியாவில் தரையிறங்கிய மேக்ரான் அங்கு விரைவில் அமைதி மீட்டெடுக்கப்படும் என உறுதியளித்தார்... மேலும், தேவைப்படும் வரை பாதுகாப்புப் படைகள் நியூ கலிடோனியாவில் நிலைநிறுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்