முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா - மாணவியை பாராட்டிய அமைச்சர்

Update: 2023-10-01 02:46 GMT

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில், பொறியியல் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது. அப்போது மதுமிதா என்ற மாணவி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாதனைகளை பற்றி சரளமாக பட்டியலிட்டு பேசினார். அவரை அழைத்து பாராட்டிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கருணாநிதியின் சாதனைகளை நாங்கள் கூறினால் அது அரசியல்.... ஆனால் ஒரு மாணவி சாதனைகளை எடுத்துக் கூறியதுதான் உண்மையான சாதனை என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்