வனத்துறை துப்பாக்கி சூடு சம்பவம் - "திட்டமிட்ட கொலை?".. கதறும் மகள் - கோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2023-11-16 11:46 GMT

வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியான முதியவர் தொடர்பான வழக்கு குறித்து காவல்துறை விரிவான பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது..

தேனியைச் சேர்ந்த வினோதினி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், கூலித் தொழிலாளியான தனது தந்தை ஈஸ்வரன் கம்பத்தில் முன்னாள் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் தோட்டத்தில் வேலை செய்து வந்த நிலையில், வனக்காவலர்கள் மற்றும் அலுவலர்கள் மது அருந்திக் கொண்டிருந்த தனது அப்பாவிடம் உல்லாசமாக இருப்பதற்கு பெண்களை அழைத்து வா என்று தகாத முறையில் பேசியதால் தகராறு ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்... இந்நிலையில், கடந்த அக்டோபர் 28ம் தேதி முன்விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு திருமுருகன் மற்றும் அவருடன் பணிபுரியும் பிச்சை, முரளிதரன், ஜார்ஜ் என்ற பென்னிகுட்டி, பிரபு, சுமன், ஈஸ்வரன், கார்த்திக், சந்தனகுமார் ஆகியோர் கூட்டாக சேர்ந்து ஈஸ்வரனை மிரட்டி வனப்பகுதிக்குள் அடித்து இழுத்துச் சென்று துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டதாக வினோதினி கூறியுள்ளார்... வனத்துறையினரைத் தாக்கியதாகவும், தற்காப்புக்காகச் சுட்டதாகவும், பொய்யாக தனது தந்தை மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்... சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர் மனுவில் கோரிக்கை விடுத்த நிலையில் அரசுத்தரப்பில், துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, காவல்துறை தரப்பில் விரிவான பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்..

Tags:    

மேலும் செய்திகள்