இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரலான முதல் தமிழ் பெண் - யார் இந்த இக்னேசியஸ் டெலாஸ் புளோரா?
இக்னேசியஸ் டெலாஸ் ஃபுளோரா இந்திய ராணுவ மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற முதல் தமிழ்ப் பெண் என்பதால் பெருமையாக உள்ளது என குடும்பத்தினர் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
இந்திய ராணுவ செவிலியர் சேவையில் தமிழகத்தில் இருந்து முதல் பெண் மேஜர் ஜெனரலாக இக்னேசியஸ் டெலோஸ் புளோரா பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பதவி உயர்வு பெற்றுள்ள ஃபுளோராவின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் வடக்கூர். இவருடைய தந்தை லூர்துசாமி பிள்ளை, தாய் தெரசம்மாள். ஃபுளோரா உடன் பிறந்த சகோதரர்கள் மூன்று பேரும் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்கள். செவிலியர் பிரிவில் முதன்மை இடமான மேஜர் ஜெனரல் பதவி உயர்வை புளோரா பெற்றுள்ளது பெருமையாக உள்ளது என அவரது சகோதரி டெய்சி தெரிவித்துள்ளார்.