பிரபல தமிழ் ஆய்வாளர் காலமானார் - போராடி பிரிந்த உயிர்

Update: 2023-10-07 02:10 GMT

ஒடிசா பாலு என அழைக்கப்படும் சிவ பாலசுப்பிரமணியன், குமரிக்கண்டம் லெமூரியா கண்டம் போன்ற ஆய்வுகள் மூலம் மக்களிடையே அதிகம் அறியப்பட்டவர். பழங்கால தமிழர்கள் ஆமைகளின் நகர்வை வைத்து கப்பல் போக்குவரத்தை மேற்கொண்டனர் என்பது போன்ற தமிழர்களின் பழமையான பல கண்டுபிடிப்புகள் வரலாற்றை வெளியில் கொண்டு வந்தவர் ஒடிசா பாலு. இவர் புற்றுநோய் காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஒடிசா பாலு உயிரிழந்தார். திருச்சி உறையூரை பூர்விகமாக கொண்ட இவரின் இறுதிச் சடங்குகள் சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்