"விஜிலன்ஸ் அதிகாரிகள் என மிரட்டும் போலி நிருபர்கள் "-எச்சரிக்கை விடுத்த போலீஸ்
பத்திரிகையாளர்கள் என கூறிக்கொண்டு போலி நிருபர்கள் சிலர், சார்பதிவாளர் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பணிபுரிவோரிடம் மிரட்டி பணம் பறிக்கும் செயல் நடந்து வருவதாக திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் கண்காணிப்புத்துறை தெரிவித்துள்ளது. நேரடியாகவும், தொலைபேசி வழியாகவும் தங்களை விஜிலன்ஸ் அதிகாரிகள் என கூறிக்கொண்டு சிலர் அரசு ஊழியர்களை மிரட்டி வரும் நிலையில், அது குறித்து உடனடியாக புகார் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாரேனும் மிரட்டி பணம் பறிக்க முயன்றால், அது பற்றிய தகவல்களை போலீசாருக்கும், லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் உடனடியாக தெரிவிக்க வேண்டும் எனவும் அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.