வெளியே வரும் கோடையின் கோரமுகம்..ஈரோட்டில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. விழி பிதுங்கும் மக்கள்

Update: 2024-04-26 09:43 GMT

கோடையின் தாக்கத்தால் தண்ணீர் பிரச்சினை தலைதூக்கியுள்ள நிலையில், அடர்ந்த வனப்பகுதியில் ஊற்றுகளில் வழிந்தோடும் தண்ணீரை குடிநீராக பயன்படுத்துவதாக அந்தியூர அருகேயுள்ள மலை கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

கோடையின் தாக்கம் தொடங்கியுள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நீர்நிலைகள் வறண்டு காணப்படுவதால் விசாயம் மற்றும் கால்நடைகளுக்கு தேவையான தண்ணீரை விலை கொடுத்து வாங்குவதாக அந்தியூர் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வினியோகிக்கப்படுவதால், அடர்ந்த வனப்பகுதியில் ஊற்றுகளில் வழிந்தோடும் தண்ணீரை குடிக்க பயன்படுத்துவதாக தாமரைக்கரை மலை கிராம மக்கள் கூறியுள்ளனர். ஊசிமலை., ஒந்தனை., கொங்காடை உள்ளிட்ட கிராமங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்