கொடைக்கானலில் வெடிக்க போகும் போராட்டம் ? ரிசார்ட் உரிமையாளர்கள் எச்சரிக்கை

Update: 2024-05-04 17:10 GMT

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் வழங்கும் அறிவிப்புக்கு எதிராக, ஹோட்டல் அண்ட் ரிசார்ட் உரிமையாளர் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து அதன் தலைவர் அப்துல்கனி ராஜா பேசுகையில், குறைவான அளவில் இ-பாஸ் கொடுத்தால், ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதி வைத்திருக்கும் தங்களுக்கு பொருளாதார ரீதியாக பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்தார். மேலும் இ- பாஸ் நடைமுறையை ரத்து செய்யாவிடில், விடுதிகளில் தங்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்