தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை மூவாயிரத்து 63 ஆக உயர்ந்துள்ளது, ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 26 வனப் பிரிவுகளில் யானைகளின் பாலின விகிதம், எண்ணிக்கை உள்ளிட்டவை கணக்கெடுக்கப்பட்டன. இதுதொடர்பான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை 2024-ஐ முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதில் கடந்த 2017 கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் இரண்டாயிரத்து 761 ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை, 2023-ல் இரண்டாயிரத்து 961 ஆக உயர்ந்தது. இந்நிலையில், தற்போதைய கணக்கெடுப்பில் யானைகளின் எண்ணிக்கை மேலும் உயர்ந்து மூவாயிரத்து 63 ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு யானைகள் வாழிடங்களை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய அரசின் முயற்சிகள் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.