தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட யானை.. நொடியில் தப்பிய உயிர்.. பதறிய கூட்டம்.. BP-ஐ எகிற வைத்த வீடியோ

Update: 2024-06-28 12:47 GMT

நீலகிரி மாவட்டம் தர்மகிரி பகுதியில் உள்ள ஆற்றில், கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அப்போது 3 யானைகள் அப்பகுதியில் ஆற்றைக் கடந்து செல்ல முயற்சி செய்தன. அதிலிருந்த பெண் யானை ஒன்று சுமார் 300 மீட்டர் தூரம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்த பாறைகளை பயன்படுத்தி, தட்டுத் தடுமாறி கரையை அடைந்த யானை வனப்பகுதிக்குள் நடந்து சென்றது. இந்த காட்சிகளை இளைஞர்கள் சிலர் செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்