மருதமலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட தாய் யானையை பிரிய மனமில்லாமல், தாயையே அதன் குட்டி யானை சுற்றி சுற்றி வந்த காட்சிகள் எளிதில் மறக்கக் கூடியவை அல்ல...
தாய் யானை நடமாட முடியாத சூழலில் இருந்ததால், அதன் குட்டி ஆண் யானை மற்ற யானைகளுடன் காட்டுப்பகுதிக்கு சென்றது...
தொடர் சிகிச்சைக்கு பின் தாய் யானை உடல்நலம் தேறிய நிலையில், குட்டி யானையை சேர்க்க முயற்சித்தனர்.
ஆனால் பல கட்ட போராட்டத்திற்கு பிறகும் தாய் யானையுடன் குட்டி யானையை சேர்க்க முடியவில்லை...
இதனால் தாய்ப்பாலின்றி குட்டி யானை தவித்து வர..வனத்துறை அதிகாரிகள் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு அழைத்து சென்றனர்...
கடந்த 9ம் தேதி கொண்டு செல்லப்பட்ட குட்டி யானைக்கு, ஊட்டச்சத்து உணவுகள், லாக்டூஜன், மற்றும் மருந்து மாத்திரைகள் கொடுத்து கண்காணித்து வந்தனர்...
இந்நிலையில் கடந்த சில நாட்களாக குட்டி யானைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்ட யானைக்கு, கால்நடை மருத்துவர் ராஜேஷ் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளித்து வந்தார்...
அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தி முழுவதும் இல்லாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது...
இவற்றுக்கு தாய்ப்பால் இல்லாமல் அவதியுற்றதே காரணம் என கூறப்படுகிறது..குட்டி யானைகளுக்கு குறிப்பிட்ட சில வருடங்கள் வரை தாய்ப்பால் முக்கியம். ஆனால் தாய் யானை கல்லீரல் பாதிக்கப்பட்ட போதிலிருந்தே, தாய்ப்பால் இல்லாமல் இருந்து வந்ததால், குட்டி யானையின் உடல்நிலை மோசமடைந்ததாக கூறப்படுகிறது..