படித்து முடித்தவுடன் உடனடி வேலை, பல லட்சம் சம்பளம் கொடுத்த மாஸ் டிகிரி படிப்பு இன்று பரிதாப நிலையில்

Update: 2024-09-21 11:44 GMT

படித்து முடித்தவுடன் உடனடி வேலை பல லட்சம் சம்பளம் கொடுத்த மாஸ் டிகிரி படிப்பு இன்று பரிதாப நிலையில் முக்கிய கல்வி நிறுவனங்களில் க்ளோஸ் ஆகும் கோர்ஸ்

நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் எம்.சி.ஏ. பட்டப்பிடிப்பு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எம்.சி.ஏ பட்டதாரிகளுக்கு வேலையில்லாததுதான் பின்னணி காரணமா?.. கல்வியாளர்கள் சொல்வது என்ன?.. பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி சார்ந்த வேலை வாய்ப்புகளில் எம்.சி.ஏ. பட்டதாரிகளுக்கு மவுசு அதிகம்...

இந்நிலையில்தான், ஐஐடி ரூர்க்கி, என்ஐடி துர்காபூர் உள்ளிட்ட நாட்டின் முன்னணி உயர் கல்வி நிறுவனங்களில் இருந்து எம்.சி.ஏ எனும் முதுகலை பட்டப்படிப்பை நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது...

கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள என்ஐடி, பாட்னாவில் உள்ள என்ஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களிலும் அடுத்தாண்டு முதல் எம்சிஏ பட்டப்படிப்பு நடத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது...

இதன் பின்னனி காரணமாக, சுமார் ஐந்து லட்சம் வரை செலவழித்து எம்.சி.ஏ பட்டம் பெறும் பட்டதாரிகளுக்கு, சரியான வேலை கிடைக்கவில்லை என்றும், அதிலும் 2021ல் படித்த ஏராளமான இளைஞர்கள் வேலை கிடைக்காமல் அல்லல் பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது...

எம்.சி.ஏக்கு நேர்ந்த இந்த நிலை, எம்.டெக் படிப்புகளுக்கும் நேரிடும் என்ற அச்சமும் எழுந்திருக்கிறது..

ஆக மொத்தம்.. வேலைக்கேற்ப படிப்பு வைத்திருப்பவர்களை தேடி வந்த ஐடி நிறுவனங்கள் தற்போது, வேலைக்கு ஏற்ப தகுதியும், திறனும் இருப்பவர்களை தேடி வருவதே இதற்கு காரணம் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்