அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், பிற கட்சியினர் அ.தி.மு.கவில் இணைந்தனர். திராவிட தமிழர் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் செல்வ முருகன் தலைமையில், ஆதி தமிழர் பேரவை உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகிய நூற்றுக்கு மேற்பட்டோர் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு அ.தி.மு.க துண்டு அணிவித்து எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கூறினார்.