அருணை மருத்துவக் கல்லூரியில் மீண்டும் இறங்கிய ED - சீல் வைக்கப்பட்ட அறைகளைத் திறந்து ஆய்வு
திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான அருணை மருத்துவக் கல்லூரியில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தென்மாத்தூர் ஊராட்சியில் உள்ள அருணை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை மேற்கொண்டனர். 5 நாட்கள் நடைபெற்ற சோதனையின் முடிவில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள், அருணை மருத்துவக் கல்லூரியில் உள்ள அறைகளில் அவற்றை வைத்து, சீல் வைத்து சென்றனர். இந்நிலையில், சீல் வைக்கப்பட்ட அறைகளை திறந்து ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆவணங்கள் குறித்து ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். ஆய்வு குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.