பிழைப்பு தேடி சென்னை வந்த குடும்பத்திற்கு நேர்ந்த கொடுமை...எப்படியெல்லாம் துடிச்சுதோ அந்த பிஞ்சு
பிழைப்பை தேடி சென்னை வந்த அசாம் மாநில தம்பதி தங்களின் ஐந்து வயது குழந்தையை பறிகொடுத்து தவிக்கும் துயரப் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
நீச்சல் குளத்தில் அரங்கேறியிருக்கும் மீண்டும் ஓர் உயிர் பலி சம்பவம் சென்னையை கலங்கடித்திருக்கிறது. இந்த முறை, பிழைப்புத் தேடி சென்னை வந்த அசாம் தம்பதி.. தங்களின் ஐந்து வயது ஆண் குழந்தையை பறிகொடுத்து விட்டு, மருத்துவமனை முன் நிர்கதியாய் நின்று கதறியது மனதை ரணமாக்கி இருக்கிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையின் அக்கரை பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டின் நீச்சல் குளத்தில்தான் இந்த கோரச் சம்பவம். இந்நிலையில், தம்பதியின் ஐந்து வயது குழந்தை.. பெற்றோர் இருவரும் தூங்கி கொண்டிருந்த போது, வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த நிலையில், அங்கிருந்த நீச்சல் குளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.
பிள்ளையை இழந்து கதறும் இந்த தாயை தேற்ற வார்த்தைகள் இல்லை யாரிடமும்.