"உடனடியாக நிறுத்துங்கள்.." கடுகடுத்த தேர்தல் ஆணையம்.. பாஜகவுக்கு பறந்த நோட்டீஸ்

Update: 2024-05-22 16:00 GMT

ராஜஸ்தான் பிரசாரத்தில் நாட்டின் வளங்களை எல்லாம் காங்கிரஸ் இஸ்லாமியர்களுக்கு கொடுத்துவிடும் என பிரதமர் மோடி பேசியதற்கு எதிராக காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தது. இதுபோல் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பை ஒழித்துவிடும் என ராகுல் காந்தி பேசியதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பாஜகவும் புகார் தெரிவித்தது. இரு புகார்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் பதிலைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக சமூகத்தை பிளவுபடுத்தும் கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என உங்கள் நட்சத்திர பேச்சார்களை அறிவுறுத்துக்கள் என பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவை கேட்டுக்கொண்டுள்ளது. மதம் மற்றும் இனம் அடிப்படையில் பிரசாரம் செய்ய வேண்டாம் எனவும் நட்சத்திர பேச்சாளர்களை அறிவுறுத்த தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. அதுபோல, இந்திய அரசியல் சாசனம் ரத்து செய்யப்பட்டுவிடும், விற்பனை செய்யப்பட்டுவிடும் என பிரசாரம் செய்வதை தவிர்க்குமாறு உங்கள் நட்சத்திர பேச்சாளர்களை அறிவுறுத்துங்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கேவையும் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்