மதிமுக நிர்வாகிகள் மூவர் பலி..! துரை வைகோ எம்.பி. இரங்கல்

Update: 2024-08-05 12:44 GMT

ம.தி.மு.க தொண்டர் அணியைச் சேர்ந்த மூவர் சாலை விபத்தில் உயிரிழந்தது குறித்து அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. இரங்கல் தெரிவித்துள்ளார். மதுரை மாநகர் மாவட்டக்கழக தொண்டர் அணி நிர்வாகிகள் பச்சைமுத்து, அமிர்தராஜ், புலி சேகர் ஆகிய மூவரும் வாகன விபத்தில் அகால மரணம் அடைந்தார்கள் என்ற தகவல் அறிந்து துடிதுடித்துப் போனதாகக் குறிப்பிட்டுள்ளார். இவர்களது இழப்பு கட்சிக்கு மட்டுமல்ல.... அவர்களின் குடும்பத்திற்கும் தாங்க முடியாத பேரிழப்பு என்றும் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்