தொடர் உயிரிழப்பு ஏற்படுவதால் - வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு - முக்கிய அறிவிப்பு
கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டும், வெள்ளியங்கிரி மலை ஏறிய 5 பேர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தனர். இதில், வேலூரை சேர்ந்த தமிழ்செல்வன், கோவையை சேர்ந்த கிரண் மற்றும் தியாகராஜன், ஆந்திராவை சேர்ந்த சுப்பாராவ், தேனியை சேர்ந்த பாண்டியன் ஆகிய 5 பேர் உயிரிழந்த நிலையில், வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு தமிழக வனத்துறை சார்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில்
இருதய நோய் சம்மந்தப்பட்டவர்கள், மூச்சுத்திணறல் உள்ளவர்கள், உடல் பருமன், நீரிழிவு நோய், வயதில் மூத்தவர்கள்,
உடல்நிலை சரியில்லாதவர்கள், கொரோனாவினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தவர்கள் உள்ளிட்ட பக்தர்கள், வெள்ளியங்கிரி மலைக்கு செல்வதற்கு முன்பு மருத்துவரை சந்தித்து முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் குழுவாக செல்லுமாறும் வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.