"இந்த மாதிரி லிங்குகளை தொட்டு விடாதீர்கள்..." - சைபர் கிரைம் விடுத்த எச்சரிக்கை

Update: 2023-11-11 07:06 GMT

டெலிகிராம் செயலியில் லிங்க் அனுப்பி நூதன முறையில் மோசடி நடைபெறுவதால், தேவையற்ற லிங்குகளை க்ளிக் செய்து பார்க்க வேண்டாம் என, தாம்பரம் காவல்துறை ஆணையரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தாம்பரம் சைபர் கிரைமில் மட்டும் நடப்பாண்டில் 200 புகார்கள் பதிவாகியுள்ளதாகவும், இந்த லிங்க் மோசடி மூலம் 20 கோடி ரூபாய் பணத்தை மக்கள் இழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த புகார்கள் இருப்பின் 1930 என்ற சைபர் கிரைம் எண்ணிலும், சைபர் கிரைம் இணையதளத்திலும் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்